இந்தியாவிற்கு நுழைய முயன்ற வங்க வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர்
இந்தியாவிற்கு நுழைய முயன்ற வங்க வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர்
ADDED : ஜூன் 30, 2024 02:48 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக, நுழைய முயன்ற 11 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டனர்.
திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த சில நபர்கள் எல்லை தாண்டி வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அகர்தலா ரயில் நிலையத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் சேர்த்து, மொத்தமாக 11 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இந்தியாவிற்குள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக, 11 பேரும் நுழைய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 11 பேரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சென்னை, மும்பை, கோல்கட்டாவுக்கு வேலை தேடி, வந்ததாக, போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.
கடத்தல் செய்வதற்காக வந்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஜூன் 27ம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக அகர்தலா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.