தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 11 சிறப்பு ரயில்கள் ரத்து

11 சிறப்பு ரயில்கள் ரத்து

11 சிறப்பு ரயில்கள் ரத்து


ADDED : ஜூன் 12, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2024 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'பயணியர் வசதிக்காக துவக்கப்பட்ட 11 சிறப்பு ரயில்கள், அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

கோடை விடுமுறை, தேர்தல், திருவிழா என பல காரணங்களால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இவை தற்போது ரத்து செய்யப்படுகின்றன. அதன் விபரம்:

ரயில் எண் 08543: விசாகபட்டிணம் - விஸ்வேஸ்வரய்யா முனையம் ரயில் வரும் 16ம் தேதி முதலும்; எண் 08544: விஸ்வேஸ்ரவய்யா முனையம் - விசாகபட்டிணம் ரயில், வரும் 17 முதலும்; எண் 08845: சான்ட்ராகா - விஸ்வேஸ்வரய்யா முனையம் ரயில், வரும் 21 முதலும் ரத்து செய்யப்படுகின்றன.

எண் 08846: விஸ்வேஸ்வரய்யா முனையம் - சான்ட்ராகா ரயில், வரும் 23 முதலும்; எண் 06565: விஸ்வேஸ்வரய்யா முனையம் - மால்டா டவுன் ரயில், வரும் 19 முதலும்; எண் 06566: மால்டா டவுன் - விஸ்வேஸ்வரய்யா முனையம் ரயில், வரும் 22 முதலும்; எண் 06521: விஸ்வேஸ்வரய்யா முனையம் - கவுஹாத்தி ரயில், வரும் 18 முதலும் ரத்து செய்யப்படும்.

எண் 06522: கவுஹாத்தி - விஸ்வேஸ்வரய்யா முனையம் வரும் 22 முதலும்; எண் 06218: கயா - யஷ்வந்த்பூர் ரயில், வரும் 17 முதலும் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

அதுபோன்று எண் 06587: பகத் கி கோதி - விஸ்வேஸ்வரய்யா முனையம் ரயில், வரும் 20, 27ம் தேதிகளிலும்; எண் 06588: விஸ்வேஸ்வரய்யா முனையம் - பகத் கி கோதி ரயில், வரும் 23, 30ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us