ADDED : ஏப் 08, 2024 04:47 AM
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நிறைவு பெற்ற நிலையில், காப்பி அடித்ததால் 11 மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவிய ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த மார்ச் 26ம் தேதி, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு துவங்கி, 2,747 மையங்களில் நடந்தது. ஏப்ரல் 6ம் தேதி வரை தேர்வு நடந்தது.
மொத்தம், 8.75 லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வின் போது, காப்பி அடித்ததாக கூறி, 11 மாணவர்கள், தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவியதாக, ஆறு ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள், காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விடைத்தாள்கள், மாவட்ட கரூவூலங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது.
