ADDED : மார் 01, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்வாட்: தார்வாட் நகரில் வசிப்பவர் சித்தனகவுடா, 30. இவர் தன் வீட்டருகில் வசிக்கும் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதே போன்று பல நாட்கள் நடந்துள்ளது.
கடந்த 2022 ஜூலை 2ம் தேதி, சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
தார்வாட் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சித்தனகவுடா கைது செய்யப்பட்டார். சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்தது. குழந்தையின் டி.என்.ஏ., பரிசோதனையில் சித்தனகவுடாவின் குற்றம் உறுதியானது.
விசாரணையில் குற்றம் உறுதியானதால், 11 ஆண்டு சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.