ADDED : ஆக 15, 2024 07:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி, 1,160-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு நேற்று விடுதலை அளிக்கப்பட்டதாக டில்லி சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சதீஷ் கோல்சா அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி, நன்னடத்தை அடிப்படையில் 1,160- குற்றவாளிகளுக்கு நேற்று விடுதலை அளிக்கப்பட்டது.
மேலும், சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கூடுதலாக முகத்தை அடையாளம் காணும் திறன்படைத்த 1,248 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
சிறைகளில் 3,200 புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவு பரிசீலனையின் மேம்பட்ட கட்டத்தில் இருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

