ADDED : பிப் 14, 2025 11:32 PM
அமிர்தசரஸ்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர்.
கடந்த மாதம் 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கையிலும், காலிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில், அவர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
அதற்கு பலத்த எதிர்ப்பு இந்தியாவில் கிளம்பிய நிலையில், இன்று இரவு 10:00 மணிக்கு, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, எட்டு பேர் குஜராத், மூன்று பேர் உத்தர பிரதேசம், தலா இருவர் கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தலா ஒருவர் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் எவ்விதம் அழைத்து வரப்பட உள்ளனர் என்ற தகவல் இல்லை.

