UPDATED : மே 10, 2024 08:46 PM
ADDED : மே 10, 2024 08:42 PM

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், நக்சல் அமைப்பினர் 12 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியதாவது:இந்த என்கவுன்டரின் மூலம் இந்த ஆண்டு கொல்லப்பட்ட நக்சல்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
ஏப்ரல் இறுதி வரை, பாதுகாப்புப் படையினரால் 91 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; இந்த எண்ணிக்கை இப்போது 103 ஆக உயர்ந்துள்ளது - இது 2019 க்குப் பிறகு மிக அதிகம்.
“பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நக்சலிசத்துக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் நக்சலிசம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள், மேலும் இரட்டை எஞ்சின் சர்க்காரின் பலனை நாங்கள் பெறுகிறோம், ” இவ்வாறு முதல்வர் கூறினார்.