ஆறு வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
ஆறு வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
ADDED : ஆக 28, 2024 07:34 PM
புதுடில்லி:ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு டில்லியில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பரேவா முன் விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் வின்னெட் தஹியா ஆஜரானார்.
சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 6 ஆண்டுகளும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 6 ஆண்டுகளும் என குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.