sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக எல்லை வரை 123 கி.மீ., சாலை மேம்பாடு

/

தமிழக எல்லை வரை 123 கி.மீ., சாலை மேம்பாடு

தமிழக எல்லை வரை 123 கி.மீ., சாலை மேம்பாடு

தமிழக எல்லை வரை 123 கி.மீ., சாலை மேம்பாடு


ADDED : மார் 07, 2025 11:14 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 மாநில நெடுஞ்சாலை பிரிவு சார்பில், வெவ்வேறு திட்டங்களின் கீழ், நடப்பு ஆண்டில், 4,848 கோடி ரூபாய் செலவில், 1,850 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலைகளும், 2,570 கி.மீ., துாரத்துக்கு மாவட்ட சாலைகளும் மேம்படுத்தப்படும்

 தட்சிண கன்னடா மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்களும், விஜயபுரா மாவட்டம், தாலிகோட்டே அருகில் ஒரு மேம்பாலமும், மைசூரு மாவட்டம், கபினி ஆற்றின் குறுக்கே மற்றும் கப்படி கிராமத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே தலா ஒரு மேம்பாலமும், கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா, தண்டோத்தி கிராமத்தின் அருகில், காகினா ஆற்றின் குறுக்கே ஒரு மேம்பாலமும் அமைக்கப்படும்

 மாநிலத்தில், பாழடைந்த 39 பாலங்கள், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படும்

 குடகு மாவட்டம், விராஜ்பேட்டை - பொன்னம்பேட்டை, மடிகேரி தாலுகாவில் கன மழையால் பாழடைந்த சாலைகள், பாலங்கள், 20 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்

 ராய்ச்சூர் - சிந்தனுார் இடையேயான சாலை, 1,696 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

 தேவனஹள்ளி - விஜயபுரா - ஹெச்.கிராஸ்., - வேம்கல் - மாலுார் - தமிழக எல்லை வரை, தொழில் வளையத்தை இணைக்கும் 123 கி.மீ., துார சாலை, 30 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.

 மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாக்கி உள்ள முக்கிய சாலைகளின் 1,317 கி,மீ., துார சாலை நடப்பு ஆண்டில் முடிக்கப்படும்

 கர்நாடக மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் - 4ன் கீழ், ஏ.டி.பி., வங்கி உதவியுடன், 875 கி.மீ., துாரத்துக்கான 11 சாலைகள், 5,736 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

 கல்யாண கர்நாடகா கிராமப்புற மேம்பாட்டு வாரிய நிதியின் கீழ், ராய்ச்சூர் நகருக்கும், பைலஹொங்கல் நகருக்கும் ரிங் ரோடு அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இதுபோன்று, வாக்தாரி - ரிப்பன்பள்ளி சாலை மற்றும் மத்துார் நகரில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.






      Dinamalar
      Follow us