தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் 13 ஆண்டு சாதனையை முறியடித்த பெண்
தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் 13 ஆண்டு சாதனையை முறியடித்த பெண்
ADDED : செப் 13, 2024 08:14 AM

மங்களூரில் நடந்த தேசிய சீனியர் நீச்சல் போட்டியில், கர்நாடகாவின் ஹஷிகா ராமசந்திரா, 13 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில், இந்திய நீச்சல் பெடரேஷன் சார்பில் தேசிய சீனியர் நீச்சல் போட்டி இம்மாதம் 11ல் துவங்கியது. 31 மாநிலங்களில் இருந்து ஒலிம்பிக் வீரர் ஸ்ரீஹரி நடராஜ், பிரீ ஸ்டைல் நிபுணர் அனீஷ் கவுடா உட்பட 450க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர் -- வீராங்கனையர் பங்கேற்றனர்.
போட்டியை, மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் துவக்கி வைத்தார். முதல் நாள் 400 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில், மங்களூரின் ஹஷிகா ராமசந்திரா 4:24.70களில் இலக்கை அடைந்து, 13 ஆண்டுகால பெண்கள் பிரீ ஸ்டைல் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆண்கள் பிரெஸ்ட் ஸ்டிரோக் 200 மீட்டர் பிரிவில், தமிழகத்தின் தனுஷ் சுரேஷ், 2:18.85 களில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் விபரம்:
ஆண்கள்
400 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவு: அனிஷ் கவுடா, தர்ஷன், தேவன்ஷ் மகேஷ்குமார் பர்மர்
200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக் பிரிவு: தனுஷ் சுரேஷ், மணிகண்டா, அனுாப் ஆகஸ்டின்
100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவு: ஆகாஷ் மணி, ரிஷப் அனுபம் தாஸ், விநாயக் விஜய்;
50 மீட்டர் பட்டர்பிளை: பெனடிக்ட் ரோஹித், மிஹிர் அம்ப்ரே, ஆதித்யா தினேஷ்
பெண்கள்
400 மீட்டர் பிரீ ஸ்டைல்: ஹஷிகா ராமசந்திரா, விரிட்டி அகர்வால், பவ்யா சச்தேவா;
200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக் பிரிவு: தன்யா சதாக்ஷரி, ஜோதி பாஜிராவ் படி, ஹர்ஷிதா ஜெயராம்;
100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக் பிரிவு: சவுபிரிதி மோண்டல், பிரத்யசா ரே, ருஜுதா பிரசாத் ராஜத்னயா;
50 மீட்டர் பட்டர்பிளை: மஹி ஸ்வேத்ராஜ், மானவடி வர்மா, ருஜுதா பிரசாத் ராஜத்னயா
புதிய சாதனை படைத்த ஹஷிகா ராமசந்திரா - நமது நிருபர் -.