ADDED : ஆக 29, 2024 02:59 AM

சிக்கபல்லாபூர்: அதிக சத்தம் எழுப்பிய 138 பைக்குகளின் சைலன்சர்களை, ரோடு ரோலர் மூலம், போக்குவரத்து போலீசார் அழித்தனர்.
பெங்களூருவுக்கு அருகில் உள்ள கோலார், சிக்கபல்லாபூரில் தேசிய நெடுஞ்சாலைகளில், இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்தபடி, வாலிபர்கள் செல்வது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.
சில தினங்களுக்கு முன், வாலிபர் ஒருவர் விலீங் செய்தபடி ஓட்டிய பைக், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்ற அர்ச்சகர் மீது மோதியதில், அவர் உயிரிழந்தார்.
சிக்கபல்லாபூர் டவுனில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி பைக்கில் வாலிபர்கள் அட்டகாசத்தில் ஈடுபடுவதாக, போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து, நேற்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதிக சத்தம் எழுப்பிய 138 பைக்குகளின் சைலன்சர்களை பறிமுதல் செய்தனர். பின், அவை ரோடு ரோலரை பயன்படுத்தி அழிக்கப்பட்டன.
'அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்தினால், பைக்குகள் பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

