காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் ஜூன் 25, 26ல் 153ம் ஆண்டு விழா
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் ஜூன் 25, 26ல் 153ம் ஆண்டு விழா
ADDED : ஜூன் 23, 2024 06:33 AM

சிவாஜி நகர்: திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 25, 26ம் தேதிகளில் 153ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. 26ல், சுவர்ண அபிஷேகம் நடக்கிறது.
சிவாஜி நகர் திம்மையா சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் வருஷாபிஷேக விழா நடக்கிறது. இந்த ஆண்டு 153ம் ஆண்டு விழா, வரும் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது.
முதல் நாளான, 25ல் மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை கணபதி பூஜை, மஹா சங்கல்பம், ஸ்வாதி புண்யாஹவசனா, அனைத்து பரிவாரங்களுக்கும் கலச ஸ்தாபனை, காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சி அம்பாளுக்கு கலச ஸ்தாபனை, மூல மந்திரம், ஹோமம், பூர்ணாஹூதிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இரண்டாம் நாளான, 26ல் காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், ஈஸ்வரர், பார்வதிக்கு சிறப்பு ஹோமம், வஸ்திரம் சமர்ப்பணம், மஹா பூர்ணாஹூதி, கலச அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
காலை 11:15 மணி முதல் 11:45 மணி வரை சுவர்ண அபிஷேகம் எனும் தங்க நாணயம் அபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலில் நடக்கும் அபிஷேகங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இரு நாட்களும் விழாவிற்கு வருகை தந்து ஈஸ்வரன், அம்பாள் அருள் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.