ADDED : செப் 14, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தர்பூர்: மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் ஜான்சி - கஜுராஹோ சாலையில் உள்ள கைடி கிராமம் அருகே அதிவேகமாக சென்ற லாரி, சாலையில் சென்ற பசுக்கள் மீது, நேற்று முன்தினம் இரவு மோதியது.
இந்த விபத்தில், 16 பசுக்கள் உயிரிழந்தன; மேலும் ஐந்து பசுக்கள் காயம் அடைந்தன.
இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பசுக்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.