பள்ளி சென்ற 16 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பலி
பள்ளி சென்ற 16 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பலி
ADDED : பிப் 22, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கம்மாரெட்டி மாவட்டத்தின் சிங்க ராயபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிதி, 16, இவர், கம்மாரெட்டியில் தன் பெற்றோருடன் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் ஸ்ரீநிதி பள்ளிக்கு சென்றார்.
பள்ளி வளாகம் அருகே சென்ற போது, ஸ்ரீநிதி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உடனே, ஸ்ரீநிதியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, முதலுதவி அளித்ததும், உயர் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், ஸ்ரீநிதி மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.