ADDED : பிப் 04, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மாநகர் முழுதும் 18 லட்சம் தேர்தல் பிரசார விளம்பர போஸ்டர்களை அகற்றியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், மாநகர் முழுதும் 18.82 லட்சம் தேர்தல் பிரசார போஸ்டர்கள் பேனர்கள், ஹோர்டிங்குகள் மற்றும் பிற அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
அரசியல் கட்சிகளின் சாதனைகளை விளக்கும் தேர்தல் போஸ்டர்கள், ஹோர்டிங்குகள், பேனர்கள் போன்றவற்றை மாநகராட்சி எந்த அனுமதியும் அளிக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.