தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஞ்சாப் மாநிலத்தில் ரூ.192 கோடி பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.192 கோடி பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.192 கோடி பறிமுதல்


ADDED : ஏப் 10, 2024 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்:தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில், 192 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், மதுபானம் மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.

அன்று முதல் நேற்று முன்தினம் வரை, பஞ்சாப்மாநிலத்தில் 166.58 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், 12.15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம், 3.87 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் மற்றும் 8.82 கோடி ரூபாய் மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் போலீசார் மாநிலம் முழுதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில்உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி தேர்தல் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us