ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி
ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி
ADDED : மே 06, 2024 03:16 PM

சண்டிகர்: ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த புனித் குமார் என்பவரின் தாயார் பெயரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் புனித் குமார் என்பவர் பலவிதமான இணைய மோசடிகளில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளார். அவர் தற்போது இந்தியன் வங்கியில், தங்கமாக மாற்றி தாயாரின் பெயரில் லாக்கரில் வைத்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, புனித் குமார் தாயார் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து புனித் குமார் கைது செய்யப்பட்டார். அவர் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.