ADDED : மார் 02, 2025 06:27 AM
பெங்களூரில் இருந்து, கும்பகோணத்திற்கு குட்கா கடத்திய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்படுவதாக, திருச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மண்ணச்சநல்லுார் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும்படி வந்த சொகுசு காரை சோதனை செய்தபோது, குட்கா கடத்திச் சென்றது தெரிந்தது.
காரில் இருந்த தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை ராஜா, 28, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், 28, ஆகியோரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். பெங்களூரில் இருந்து, கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்வதற்காக, குட்காவை கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்- நமது நிருபர் -.

