ADDED : மார் 07, 2025 10:59 PM
கலபுரகி: வேகமாக வந்த இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நான்கு வாலிபர்கள் இறந்தனர்.
கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா - தெல்கூர் சாலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, ஒரே சாலையில் இரு பைக்குகள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. இரு பைக்கிலும் பயணித்த நான்கு வாலிபர்கள் துாக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
சேடம் போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர்கள், ஹபாலா கிராமத்தின் மல்லிகார்ஜுன், 20, சித்து கிஷன், 25, தெல்கூர் கிராமத்தில் வசித்த பிரகாஷ், 19, சுரேஷ், 20 என்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்ததாலும், நான்கு பேரும் இறந்து விட்டதாக போலீசார் கூறினர். விபத்தில் நான்கு வாலிபர்கள் இறந்த சம்பவம், ஹபாலா, தெல்கூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.