தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஆவணமின்றி கொண்டு சென்ற 2 கிலோ தங்கம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற 2 கிலோ தங்கம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற 2 கிலோ தங்கம் பறிமுதல்


ADDED : ஏப் 13, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2024 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்: ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.57 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.170 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் இருக்க, ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூரில் இருந்து சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகாலை நோக்கி 'கேஏ 17 இசட் 9447' என்ற கார் சென்று கொண்டு இருந்தது.

ஹனுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சந்தேகலா சோதனைச் சாவடியில் காரை சோதனையிட்டபோது, ஒரு கோடியே 57 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.17 கிலோ தங்கம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வருமான வரித்துறை உதவி இயக்குனர் ரங்கநாத், அதிகாரிகள் ரகு, திவாகர் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us