ADDED : ஏப் 02, 2024 10:05 PM
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் 13 லோக்சபா தொகுதிகளுக்கு ஜூன் 1ல் தேர்தல் நடக்கிறது. இங்கு, தனித்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி, ஏற்கனவே 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது.
இந்நிலையில், அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலர் சந்தீப் பதக் நேற்று இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
பஞ்சாபின் ஹோஷியார்பூரில் ராஜ் குமார் சப்பேவால் மற்றும் அனந்த்பூர் சாஹிப்பில் மல்விந்தர் சிங் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸில் இருந்த சப்பேவால், ஆம் ஆத்மி கட்சியில் கடந்த மாதம் இணைந்தார்.
முதல் பட்டியலில் ஜலந்தர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் ரிங்கு, சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தார்.
