கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்த்த போராட்டத்தில் 2 பேர் தீக்குளிப்பு
கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்த்த போராட்டத்தில் 2 பேர் தீக்குளிப்பு
ADDED : ஆக 28, 2024 08:06 PM
நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் நேற்று நடந்த போராட்டத்தின்போது, தீக்குளிக்க முயன்ற இருவரை போலீசார் தடுத்து காப்பாற்றினர்.
கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் சார்பில், கஸ்னா அருகே கழிவு மேலாண்மை மையம் கட்டப்படுகிறது.
இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிரேட்டர் நொய்டா மக்கள் நேற்று முன் தினம் மாலை, கஸ்னா கல்வெர்ட் அருகே போராட்டம் நடத்தினர். அப்போது, மிலாக் லாச்சி கிராமத்தில் வசிக்கும் அஜித் சர்மா மற்றும் புலந்த்ஷாஹர் மாவட்டம் ககோடில் வசிக்கும் ஹிமான்ஷு வசிஷ்ட் ஆகிய இருவரும் கட்டுமானப் பணியை தடுத்து ஆவேசமாக கோஷமிட்டனர்.
அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். திடீரென இருவரும் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றவைத்துக் கொண்டனர். அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து காப்பாற்றினர்.
இதுகுறித்து, போலீஸ் துணைக் கமிஷனர் கமிஷனர் அசோக் குமார் சிங் கூறுகையில், “தீக்குளித்த இருவருக்கும் இந்த இடத்தில் நொந்த நிலம் இல்லை. மேலும், அவர்கள் இருவரும் இந்தப் பகுதியில் வசிக்கவும் இல்லை. எனவே, இருவர் மீதும் அரசுப் பணிகளை செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,”என்றார்.

