ADDED : மார் 22, 2026 05:46 AM
சண்டிகர்: தொழிலதிபரிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த இருவர் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரை சேர்ந்த ஜாக்கி குமார் மற்றும் விகாஸ் அரோரா ஆகிய இருவரும் பதிண்டா நகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு சட்டவிரோத கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பதிண்டாவில் ஒரு தொழிலதிபரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். சட்டவிரோத துப்பாக்கிகளை டில்லியில் வாங்கியதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவர் மீதும் கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
