தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 200 ஆண்டுகள் பழமையான மவுன குரு மடம்

200 ஆண்டுகள் பழமையான மவுன குரு மடம்

200 ஆண்டுகள் பழமையான மவுன குரு மடம்


ADDED : ஜூலை 29, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

200 ஆண்டுகள் பழமையான மடம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின் தினி மவுனகுரு சுவாமிகளின் பிருந்தாவனம் இங்கே அமைந்துள்ளது. இந்த மடம் பெங்களூரு மக்களிடையே பிரசித்தி பெற்றது. சித்தேஸ்வரா, சுப்பிரமணியா, கணபதி, வெங்கடேஸ்வரா சன்னிதிகளும் அமைந்துள்ளன. இங்கே வந்து தரிசிக்கும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்புகின்றனர்.

சர்வக்ஞ நகர் தொட்டகுன்டே திந்தினி ஸ்ரீஸ்ரீஸ்ரீமத் மவுனகுரு சுவாமிகள் மடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி (சுப்பிரமணிய சுவாமி) சுவாமிக்கு, இன்று 75ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகங்கள், காவடி ஊர்வலங்கள் நடக்கின்றன.

இந்த விழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. தினமும் இரவில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. முதல் நாளன்று புஷ்ப அலங்காரம்; இரண்டாம் ராஜ அலங்காரம்; மூன்றாம் நாள் வெள்ளி கவச அலங்காரம்; நான்காம் நாள் விபூதி அலங்காரம்; ஐந்தாம் நாளான நேற்று சந்தன அலங்காரம் நடந்தது.

வரும் ஆகஸ்ட் 4ம் தேதி பகல் 12:00 மணிக்கு, மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்று, மவுன குரு சுவாமிகள், தண்டாயுதபாணி அருள் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us