ADDED : மே 24, 2026 11:34 PM
ஏஞ்சல்ஸ்:
பிலிப்பைன்சில் ஒன்பது மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 21 பேர் மாயமாகினர்; 24 பேர் உயிர் தப்பினர்.
கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு வடக்கே உள்ள பம்பங்கா மாகாணத்தின் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஒன்பது மாடி கட்டடத்தின் கட்டுமான பணி நடந்து வந்தது. நேற்று அதிகாலை பலத்த இடியுடன் பெய்த மழையால் இந்த கட்டடம் திடீரென சீட்டுக் கட்டுப் போல சரிந்து விழுந்து விபத்துகுள்ளானது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிய நுாற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிந்து விழுந்த கட்டத்தின் அருகே தற்காலிக குடியிருப்புகளை அமைத்து கட்டட தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். கட்டடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டபோது, அங்கிருந்தவர்களில் 24 பேர் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்று உயிர் தப்பினர். எனினும், தொழிலாளர்களில் 21 பேரின் நிலைமை என்னவானது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
