22 வயசில் என்ன ஒரு வில்லத்தனம்; பக்கா கள்ளநோட்டு அச்சிட்ட பஞ்சாப் எமகாதகர்கள் கைது
22 வயசில் என்ன ஒரு வில்லத்தனம்; பக்கா கள்ளநோட்டு அச்சிட்ட பஞ்சாப் எமகாதகர்கள் கைது
ADDED : ஆக 12, 2024 12:53 PM

பெரோஸ்பூர் : பஞ்சாபில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டு
பெரோஸ்பூர் உள்ள ஜைரா டவுன் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஜஸ்கரன் சிங். இவர், தனது வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று சோதனை நடத்திய போது, அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது தெரிய வந்தது.
கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.100, ரூ.200, ரூ.500 என ரூ.3.24 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு புறம் மட்டும் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தாள்கள் இருந்தன. ரூபாய் நோட்டு அச்சிட்டு கட்டிங் செய்யப்படாத ஏ4 தாள்களும் ஏராளம் இருந்தன. பிரின்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்டதும், ஜஸ்கரன் சிங் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றான். அவனை போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில், கடந்த ஆக.,2ம் தேதி ஜஸ்கரன் சிங்கை கைது செய்த போலீசார், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆகாஷ்தீப், 22, என்ற நபரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிறையில் அடைப்பு
இது குறித்து போலீசார் கூறுகையில், 'கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயற்சித்த போது சிக்கிக் கொண்டனர். பின்னர், பழக்கடை போன்ற சிறுசிறு கடைகளில் கள்ளநோட்டுக்களை மாற்றியுள்ளனர். சூதாடும் இடத்தில் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அப்போது கள்ளநோட்டு என்று அங்கிருந்த சிலர் கண்டுபிடித்து தகராறு செய்துள்ளனர். இதில் தான் விவகாரம், போலீசுக்கு வந்து விட்டது.
கள்ளநோட்டுக்களை அச்சடிப்பதற்காக, அஜித் எனும் பப்ஜி கேம் விளையாடுபவரை பயன்படுத்தி, பிரிண்ட்டிங் மெஷின், தரமுள்ள ஏ4 பேப்பர் உள்ளிட்டவற்றை வாங்கி வரச் செய்துள்ளார். தற்போது, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.