டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்
டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்
UPDATED : மே 02, 2024 10:30 AM
ADDED : மே 02, 2024 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஆளுநர் சக்சேனாவின் உத்தரவின் படி எடுக்கப்பட்டுள்ளது.
டில்லி மகளிர் ஆணையத்தில் விதிகளை மீறி ஊழியர்கள் நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வந்துள்ளது. இதையடுத்து, மகளிர் ஆணையத்தில் பணிபுரிந்த வந்த 233 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுமாறு, டில்லி ஆளுநர் சக்சேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி ஊழியர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகார் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

