23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம் புதிய பொறுப்பில் தமிழ் அதிகாரி நியமனம்
23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம் புதிய பொறுப்பில் தமிழ் அதிகாரி நியமனம்
ADDED : ஜூலை 06, 2024 05:57 AM

பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம் பிரசாத் மனோகருக்கு, கர்நாடக அரசு புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. நகர வளர்ச்சி துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடகாவில் நிர்வாக காரணங்களுக்காக நேற்று முன்தினம் 25 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் அதிகாரியான ராம்பிரசாத் மனோகர், நகர வளர்ச்சி துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். 2010 பேட்ச் அதிகாரியான இவர், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராக உள்ளார். கூடுதல் பொறுப்பாக சுற்றுலாத் துறை இயக்குனராக இருந்தார்.
இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நகர வளர்ச்சித் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பெயர் பழைய பொறுப்பு புதிய பொறுப்பு
1. ராம்பிரசாத் மனோகர் இயக்குனர், சுற்றுலா கூடுதல் செயலர், நகர வளர்ச்சி
2. நித்திஷ் பாட்டீல் கலெக்டர், பெலகாவி இயக்குனர், சிறு மற்றும் குறு தொழில்கள்
3. அருந்ததி சந்திரசேகர் கமிஷனர், கருவூலம் கமிஷனர், பஞ்சாயத்து ராஜ்
4. ஜோதி காத்திருப்போர் பட்டியல் இயக்குனர், கைத்தறி மற்றும் ஜவுளி
5. ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியல் இயக்குனர், பஞ்சாயத்து ராஜ், ரூரல் வளர்ச்சி
6. ராஜேந்திரா கலெக்டர், மைசூரு நிர்வாக இயக்குனர், கர்நாடக சுற்றுலா வளர்ச்சி ஆணையம்
7. சந்திரசேகர் நாயக் கலெக்டர், ராய்ச்சூர் கூடுதல் கமிஷனர், வணிகவரி
8. விஜய் மகாதேஷ் தம்மன்னவர் இயக்குனர், சிறு மற்றும் குறு தொழில்கள் கலெக்டர், ஹாவேரி
9. கோவிந்த ரெட்டி கலெக்டர், பீதர் கலெக்டர், கதக்
10. ரகுநந்தன் மூர்த்தி கலெக்டர், ஹாவேரி கமிஷனர், கருவூலம்
11. கங்காதர் சாமி இயக்குனர், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் கலெக்டர், தாவணகெரே
12. லட்சுமி காந்த் ரெட்டி நிர்வாக இயக்குனர், கர்நாடக நகர உள்கட்டமைப்பு கலெக்டர், மைசூரு
13. நிதிஷ் இணை செயலர், நிதி கலெக்டர், ராய்ச்சூர்
14. முகமது ரோஷன் நிர்வாக இயக்குனர், ஹெஸ்காம் கலெக்டர், பெலகாவி
15. ஷில்பா சர்மா நிர்வாக இயக்குனர், கர்நாடக மின் பகிர்மான கழகம் கலெக்டர், பீதர்
16. திலீஷ் சசி இயக்குனர், பொது மற்றும் நிர்வாக சீர்திருத்தம் சி.இ.ஓ., இ - கவர்னன்ஸ்
17. லோகண்டே சினேகல் சுதாகர் சி.இ.ஓ., ஷிவமொகா நிர்வாக இயக்குனர், கர்நாடக மின் பகிர்மான கழகம்
18. ஸ்ரீ ரூபா இயக்குனர், பட்டுக்கூடு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் கமிஷனர், கால்நடை துறை
19. கீதே மாதவ் வித்தல் ராவ் துணை கமிஷனர், கலபுரகி மாநகராட்சி பொது மேலாளர், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், பாகல்கோட்
20. ஹேமந்த் உதவி கலெக்டர், பல்லாரி சி.இ.ஓ., ஷிவமொகா
21. முகமது அலி அக்ரம் ஷா உதவி கலெக்டர், விஜயநகரா சி.இ.ஓ., விஜயநகரா
22. சரத் நிர்வாக இயக்குனர், கர்நாடக நகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம் நிர்வாக இயக்குனர், கர்நாடக நகர உள்கட்டமைப்பு வளர்ச்சி
23. செல்வமணி சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி நிர்வாக இயக்குனர், கர்நாடக நகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம்
........
...பாக்ஸ்...
மைசூரு கலெக்டர் மாற்றம் ஏன்?
மைசூரு, 'மூடா' சார்பில் பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக, காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றன.
'மூடா' முறைகேடு தொடர்பாக, கலெக்டராக இருந்த ராஜேந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டு, கர்நாடக சுற்றுலா வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
***