ADDED : செப் 14, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேத்தமங்களா : பேத்தமங்களா அருகே குட்டஹள்ளியில் உள்ள பங்காரு திருப்பதி எனும் வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலில் 27.76 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.
கன்னட, தெலுங்கு ஆடி மாதம், ஷ்ராவண மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில், இந்து அறநிலையத்துறை தாசில்தார் சுஜாதா தலைமையில், வருவாய் அதிகாரி முனி வெங்கடசாமி, கோவில் நிர்வாக அதிகாரி பிரசாத் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.
பிரம்ராம்பிகா சேவா சமிதி உறுப்பினர்களும் பங்கேற்றனர். மாலை 4:00 மணி வரை பணம் எண்ணப்பட்டது.
உண்டியலில் இருந்த 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ பதிவு செய்யப்பட்டது.