கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 2,800 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கள்ளில் கலப்படம் செய்ய பதுக்கிய 2,800 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ADDED : செப் 01, 2024 01:57 AM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., ஆனந்த் உத்தரவில், சித்துார் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் தலைமையில் போலீசார், பாலக்காடு, எருத்தேம்பதி எல்லப்பெட்டான் கோவில் அருகே, கள் உற்பத்தி செய்யும் தென்னந்தோப்பில் சோதனை நடத்தினர்.
அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த தென்னை மட்டைகளுக்கு அடியில், 80 கேன்களில், 2,800 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தோப்பை குத்தகைக்கு எடுத்துள்ள கள்ளியம்பாறை பகுதியைச் சேர்ந்த செந்தில், 53, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் கூறுகையில், ''சோதனையில், 2,800 லிட்டர் எரிசாராயமும், கள்ளில் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தோப்பு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது,'' என்றார்.