தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கர்நாடகாவில் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு

கர்நாடகாவில் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு

கர்நாடகாவில் 2வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு


ADDED : மே 25, 2024 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2024 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர், கர்நாடகாவில் இரண்டாவது நாளாக நேற்றும் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன.

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய நான்கு தென் மாநிலங்களில் யானைகளை கணக்கெடுக்கும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கின.

மூன்று நாட்கள் நடக்கும் கணக்கெடுப்பு பணியின் முதல் நாளில், வனப்பகுதியில் யானைகள் நடமாடும் வழித்தடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று, மாநிலத்தின் பண்டிப்பூர் வனப்பகுதி, பிலிகிரி ரங்கா வனப்பகுதி, மலை மாதேஸ்வரன் வனப்பகுதி, காவிரி வனப்பகுதி ஆகிய இடங்களிலும் நடந்தன.

அப்போது, யானைகளின் சாணம், காலடி போன்ற தடயங்களை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இன்று, நீர் நிலைகளில் வரும் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

இது குறித்து, பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தின் இயக்குனர் பிரபாகரன் நேற்று கூறியதாவது:

பண்டிப்பூரின் 13 வனச்சரகங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இப்பணியில், மொத்தம் 114 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், மூன்று பேர் இருப்பர்.

முதலில், நேரடியாக தென்படுபவை பதிவு செய்யப்பட்டன. இரண்டாவதாக, யானை வழித்தடத்தில் 2 கி.மீ., நடந்து சென்று, சாணம், காலடி அடையாளம் கண்டறியப்படும். அதன் சுற்றளவு, எப்போது சாணம் போட்டிருக்கும், எந்த பக்கம் சென்றிருக்கும், அதன் அளவு போன்றவை பதிவு செய்யப்பட்டது.

மூன்றாவதாக, நீர் நிலைகளில் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை ஊழியர்கள் ஒரே இடத்தில் தங்கி இருப்பர்.

நீர் குடிக்க வரும் யானைகள் விபரம் பதிவு செய்யப்படும். ஆண், பெண், வயது போன்றவற்றை கணக்கில் கொள்ளப்படும். ஊழியர்கள், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூடவே எடுத்து செல்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us