ADDED : ஜூன் 04, 2024 11:16 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட, மூன்று முன்னாள் முதல்வர்களும் அமோக வெற்றி பெற்றனர்.
லோக்சபா தேர்தலை தீவிரமாக கருதிய பா.ஜ., - ம.ஜ.த.,வுடன், கூட்டணி வைத்து கொண்டது. இம்முறை தேர்தல், பல சிறப்புகளை கொண்டிருந்தது. மூன்று முன்னாள் முதல்வர்கள், இரண்டு முன்னாள் முதல்வர் களின் மகன்கள் களத்தில் இருந்தனர்.
முன்னாள் முதல்வர்கள் பா.ஜ.,வில் ஹாவேரியில் பசவராஜ் பொம்மை, பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டர்; ம.ஜ.த.,வில் மாண்டியாவில் குமாரசாமியும் போட்டியிட்டனர். இதில் மூவரும் வெற்றி பெற்றனர். இதில், பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரான எஸ்.ஆர்.பொம்மையின் மகன். குமாரசாமி, முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திரா பா.ஜ.,விலும், முன்னாள் முதல்வர் பங்காரப்பா மகள் கீதா சிவராஜ்குமாரும் ம.ஜ.த.,விலும் போட்டியிட்டனர். இதில் ராகவேந்திரா வெற்றி பெற்றார்.