கனடாவில் 3 இந்தியர்கள் கைது: விவரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்
கனடாவில் 3 இந்தியர்கள் கைது: விவரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்
ADDED : மே 05, 2024 11:01 AM

புதுடில்லி: 'காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்த மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் உள்ள ஒரு சிலருடன் தொடர்பில் இருப்பது போல் தெரிகிறது. பஞ்சாபிலிருந்து திட்டமிட்டு கனடாவில் சில குற்ற சம்பவங்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.