ADDED : ஜன 28, 2025 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடக்கு டில்லி புராரியில் ஆஸ்கர் பப்ளிக் பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் நேற்று முன் தினம் மாலை 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது. போலீஸ், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியைத் துவக்கினர்.
இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நிலையில், சாதனா, 17, ராதிகா,7, அடையாளம் தெரியாத- ஒரு ஆண் -உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நேற்று மாலையில் முடிந்தது.

