ADDED : மார் 29, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைச்:உத்தர பிரதேசத்தில், பைக்குகள் மீது டிராக்டர் மோதியதில், குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம் பஹ்ரைச் அருகே, காண்ட்லா கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு, இரண்டு பைக்குகள் மீது டிராக்டர் மோதியது.
இந்த விபத்தில் கங்கா ராம்,28, அவரது மனைவி ஆஷா ராம், 25, குழந்தை அங்கித், 8, ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்த மூவர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

