sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவில் விழாவில் அன்னதானம் கர்நாடகாவில் 3 பெண்கள் பலி

/

கோவில் விழாவில் அன்னதானம் கர்நாடகாவில் 3 பெண்கள் பலி

கோவில் விழாவில் அன்னதானம் கர்நாடகாவில் 3 பெண்கள் பலி

கோவில் விழாவில் அன்னதானம் கர்நாடகாவில் 3 பெண்கள் பலி


ADDED : ஆக 28, 2024 02:23 AM

Google News

ADDED : ஆக 28, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு, கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், மதுகிரியின் புல்லசந்திராவில் உள்ள கரியம்மா மற்றும் முத்துராயா பூட்டப்பா கோவில் திருவிழா கடந்த 24ம் தேதி நடந்தது.

மறுநாள் பக்தர்களுக்கு அன்னதானமாக தக்காளி சாதம் பரிமாறப்பட்டது. அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர்.

தீவிர சிகிச்சை


சில மணி நேரங்களில், பலருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், மதுகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 18 பெண்கள், 12 ஆண்கள் என 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அனைவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதே கிராமத்தை சேர்ந்த கிரியம்மா, 86, திம்மக்கா, 80, திருவிழாவை காண வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காட்டம்மா, 45, ஆகிய மூன்று பெண்கள் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தனர்.

மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர். 27 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மூன்று பேரின் நிலை மோசமாக உள்ளது.

கிராமத்தில் உள்ள பள்ளியில், தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அன்னதானத்தில் பரிமாறப்பட்ட உணவு, தண்ணீர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் அசுத்தம் கலந்திருக்கலாம். அறிக்கை கிடைத்த பின்னரே, முழு விபரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுராவிலும் பாதிப்பு


உத்தர பிரதேச மாநிலம் மதுராவிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, பாரா என்ற பகுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோதுமை மாவில் சமைக்கப்பட்ட பிரசாதங்கள் பரிமாறப்பட்டன.

இதைச்சாப்பிட்ட, 120 பேருக்கு வாந்தி, தலை சுற்றல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

பிரசாதத்தில் எதுவும் கெட்டுப்போன பொருட்கள் கலக்கப்பட்டிருந்தனவா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

28_DMR_0001

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம், மாவட்ட சுகாதார அதிகாரி மஞ்சுநாத் விசாரணை நடத்தினார். இடம்: புல்லசந்திரா, துமகூரு.

----------






      Dinamalar
      Follow us