ADDED : ஆக 16, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக, பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், அரவிந்த், 24, மோஹித், 23, அஜித், 23, ஆகிய மூன்று பேரிடம் ஆண்டர்சன்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் விசாரித்தனர். இதில், தங்கவயல் உட்பட பெங்களூரு ரூரல் மாவட்டம் நந்தகுடி, ஹொஸ்கோட், ஆவலஹள்ளி, பெங்களூரு நகரின் பானஸ்வாடி ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடியதையும் ஒப்புக் கொண்டனர். இவர்கள் திருடிய, 12 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 12.25 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

