ADDED : செப் 14, 2024 11:40 PM
பெங்களூரு : வானிலை மாற்றத்தால், பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளிடம் பரவுவதால், பெற்றோர் உஷாராக இருக்கும்படி, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடகாவில் நொடிக்கு நொடி வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பரவும் பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகளிடம், வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
பெங்களூரு இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தினமும் 550 முதல் 600 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இதில், 50 சதவீதம் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது.
கே.சி., பொது மருத்துவமனை, விக்டோரியா மருத்துவமனை, வாணி விலாஸ் மருத்துவமனை உட்பட பெரும்பாலான மருத்துவமனைகளில், அனுமதிக்கப்படும் புறநோயாளிகளில், 50 சதவீதம் பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குழந்தைகளிடம் அதிகம் பரவ, அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். குழந்தைகளிடம் இருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதால், கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தொற்று குறித்து பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜூலையில் 72 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, செப்டம்பரில் 261ஆக உயர்ந்துள்ளது.
அறிகுறிகள் என்ன?
அதிக காய்ச்சல், சுவாச பிரச்னை, சளி, இருமல், கடுமையான சோர்வு, உடல் வலி, தலைவலி, குளிர், காய்ச்சல்.
அறிகுறிகள் என்ன?
* அதிக காய்ச்சல்
* சுவாச பிரச்னை
* சளி, இருமல்
* கடுமையான சோர்வு
* உடல் வலி
* தலைவலி, குளிர், காய்ச்சல்.