"பீஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து": நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்
"பீஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து": நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்
ADDED : ஜூன் 29, 2024 03:58 PM

பாட்னா: 'பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்' என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் பா.ஜ., கூட்டணி தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கின்றனர். இன்று (ஜூன் 29) பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் தே.ஜ., கூட்டணி அரசுக்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால், கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா? என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.