"இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
"இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
ADDED : ஏப் 02, 2024 01:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: இன்று இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகிற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இன்று இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துள்ளோம்.
கொரோனா தொற்று பாதிப்பிற்கு, பிறகு நாம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.இது பாராட்டக்கூடிய விஷயமாகும். இந்தியாவின் முன்னேற்றத்தை உலக நாடுகள் கவனிக்கிறது.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 90 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். பெண்களுக்கான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தினால், 42 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

