"சுயமரியாதையை சீண்டினால் பதிலடி நிச்சயம்": ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
"சுயமரியாதையை சீண்டினால் பதிலடி நிச்சயம்": ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ADDED : ஏப் 09, 2024 06:04 PM

புதுடில்லி: எங்களது சுயமரியாதையை யாராவது சீண்டினால் பதிலடி நிச்சயம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா?. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை நாட்டின் இடம் சொல்ல விரும்புகிறேன். சீனா இந்த தவறை செய்யக்கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பாதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
பதிலடி நிச்சயம்
இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் நமது சுயமரியாதையை யாராவது சீண்டினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது. எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் நிலத்தை யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

