அமலாக்கத் துறை அதிரடி சோதனை பஞ்சாபில் ரூ 3.5கோடி பறிமுதல்
அமலாக்கத் துறை அதிரடி சோதனை பஞ்சாபில் ரூ 3.5கோடி பறிமுதல்
ADDED : மே 29, 2024 09:00 PM

சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் அமலாக்கத் துறை நேற்று நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், முக்கியக் குற்றவாளியான ஜகதீஷ் சிங் என்ற போலா மீதான பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பஞ்சாபின் -பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சட்டவிரோத சுரங்கம் நடத்திய வழக்கில், ரூப்நகர் மாவட்டத்தில் 13 வளாகங்கள் அமலாக்கத் துறையால் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சுரங்க வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நசிப்சந்த் மற்றும் ஸ்ரீராம் கல் உடைக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 2013 - 20-14ல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பஞ்சாப் போலீஸ் பதிவு செய்த வழக்கு அடிப்படையில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெகதீஷ் சிங் என்ற போலாவை அடையாளப்படுத்த இது போதைப்பொருள் கடத்தல் வழக்கு என்றே கூறப்படுகிறது.கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்லாக்கத் துறையால் போலா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.