ரூ.3,500 கோடி: போட்டித்தேர்வில் தேசிய தேர்வு முகமை சம்பாதித்த தொகை!
ரூ.3,500 கோடி: போட்டித்தேர்வில் தேசிய தேர்வு முகமை சம்பாதித்த தொகை!
UPDATED : ஆக 02, 2024 01:25 PM
ADDED : ஆக 02, 2024 01:19 PM

புதுடில்லி: போட்டி தேர்வுகள் நடத்தியதன் மூலம் தேசிய தேர்வு முகமை ரூ.3,512 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவு தேர்வான க்யூட், இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ., தேர்வு உள்ளிட்டவற்றை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு, மத்திய பா.ஜ., அரசால் உருவாக்கப்பட்ட, தேசிய தேர்வு முகமைக்கு, இதுவரை ரூ. 3,512 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ராஜ்யசபாவில் தகவல்
இது தொடர்பாக, ராஜ்யசபாவில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பேசியதாவது: 2021-22ம் ஆண்டில், தேசிய தேர்வு முகமைக்கு ரூ.490 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2022-23ம் ஆண்டில் ரூ.873 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூ.1,065 கோடியும் வருமானம் கிடைத்துள்ளன. இதுவரை ரூ. 3,512 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. வருமானம் ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகளை நடத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.