ADDED : மே 11, 2024 09:22 PM
ஜான்சி:உத்தர பிரதேசத்தில், கார் மீது லாரி மோதி மணமகன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம் பிலாட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் அஹிர்வார்,25. இவருக்கு நேற்று முன் தினம் இரவு திருமண ஊர்வலம் நடந்தது. மணமகன் ஆகாஷ், அவரது தம்பி ஆஷிஷ், 20, மருமகன் மயங்க்,7, உறவினர்கள் ரவி, ரமேஷ் ஆகியோர் ஒரு காரில் திருமணம் நடக்க இருந்த மணமகளின் ஊரான சப்ரா கிராமத்துக்கு சென்றனர். காரை டிரைவர் ஜெய்கரன் ஓட்டினார்.
ஜான்சி - -கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பரிச்சா கிராமம் அருகே கார் மீது பின்னால் வந்த லாரி மோதியது. கார் தாறுமாறாக ஓடி தீப்பற்றியது. காரில் இருந்த நான்கு பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த ரவி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை தேடுகின்றனர்.