ADDED : ஜூலை 11, 2024 04:21 AM

கோலார் : மாலுாரின் சின்ன திருப்பதியின் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் 40.19 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளது.
கோலார் மாவட்டம், மாலுாரில் பிரசன்ன வெங்கட ரமண சுவாமி கோவில் உள்ளது. 'சின்ன திருப்பதி' என்றே பிரசித்தி பெற்று விளங்குகிறது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகைதருகின்றனர்.
குறிப்பாக தமிழக எல்லையில் இருப்பதால், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, வெங்கடரமண சுவாமியைதரிசிக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை இங்கு நடக்கும் பிரம்ம ரத உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டுவர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம்.
இதன்படி நேற்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் எண்ணும் பணிகள் நடந்தன. 40 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரூபாய் ரொக்கம், 24 கிராம் தங்கம், 129 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.

