தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பானகம் குடித்த 42 பேர் 'அட்மிட்'

பானகம் குடித்த 42 பேர் 'அட்மிட்'

பானகம் குடித்த 42 பேர் 'அட்மிட்'


ADDED : ஏப் 19, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2024 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: குனிகலில் ராமநவமியை ஒட்டி, பானகம் குடித்த 42 பேர் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துமகூரு மாவட்டம், குனிலின் கொவட்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மோர், பானகம் வழங்கப்பட்டது. அன்று மாலையில் 42 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் உள்ளூர் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாலுகா சுகாதார அதிகாரி மாரியப்பா, நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்த்து ஆறுதல் கூறினர். கலப்பட பானகம் உட்கொண்டதே சம்பவத்துக்கு காரணம் என டாக்டர் தெரிவித்தார். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.

பானகம் குடித்து வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர். இடம்: துமகூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us