ADDED : மார் 07, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி ;பட்ஜெட் குறித்த, 'ஆன்லைன்' கருத்தரங்கில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று பேசியதாவது:
கடந்த 2017 - -18ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், 2023- - 24ல் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதே காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதத்திலிருந்து 40.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த. 2014 - 24 வரையிலான 10 ஆண்டுகளில் நாட்டில் 17.1 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும். 4.6 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், தொழிலாளர் மருத்துவக் காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு பெறுவோர் எண்ணிக்கை, 24.4 சதவீதத்தில் இருந்து, 48.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.