sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விவசாயி நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பயன் 47 லட்சம் பேர் பயன்

/

விவசாயி நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பயன் 47 லட்சம் பேர் பயன்

விவசாயி நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பயன் 47 லட்சம் பேர் பயன்

விவசாயி நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பயன் 47 லட்சம் பேர் பயன்

1


UPDATED : செப் 08, 2024 04:56 AM

ADDED : செப் 08, 2024 12:35 AM

Google News

UPDATED : செப் 08, 2024 04:56 AM ADDED : செப் 08, 2024 12:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி டிபாசிட் செய்யப்படும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 3.24 லட்சம் விவசாயிகள் நிதி உதவி பெற்றுள்ளனர்.

கடந்த 2019 பிப்ரவரியில், 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' என்ற பெயரில் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் உதவித் தொகை டிபாசிட் செய்யப்படும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

மாநில அரசின் பொறுப்பு


இந்த திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், மூன்று தவணைகளில் மொத்தம் 6,000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வங்கி பரிவர்த்தனை வாயிலாக, விவசாயிகளுக்கு பணம் வரவு செய்யப்படும் உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக இது திகழ்கிறது.

பயனைடையும் விவசாயிகளின் விபரங்கள், மிகவும் வெளிப்படையாக இருக்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுதும் உள்ள 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 17 தவணைகளில் 3.24 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட வரையறைகளின்படி தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு.

தகுதி வாய்ந்த விவசாயிகள் யாரும் விடுபட்டு போய் விடக் கூடாது என்பதை, உறுதி செய்வதற்காக தேசிய அளவிலான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது சேவை மையம்


'விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா' பிரசாரத்தின் வாயிலாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

விவசாயிகளின் தகவல்களை பதிவு செய்வதற்காக நாடு முழுதும், ஐந்து லட்சம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கே நேரடியாக சென்று விவசாயிகள் பற்றிய விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை 31 நிலவரப்படி தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ், 46 லட்சத்து 76 ஆயிரத்து 80 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 10,900 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 11,399 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்கில், 32.35 கோடி ரூபாய் வரையில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே அதிகபட்ச பயனாளிகளாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 3 லட்சத்து 24 ஆயிரத்து 51 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

சென்னையிலும் விவசாயம்

'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், தமிழகத்திலேயே மிகவும் குறைந்தபட்சமாக சென்னையில், 100 விவசாயிகளுக்கு 25 லட்ச ரூபாய் தரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சென்னையில் விவசாயம் நடப்பதும், விவசாயிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.விவசாயத்துக்கு பெயர் பெற்ற மயிலாடுதுறை, தேனி, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us