sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

49 வன அதிகாரிகள், ஊழியர்களுக்கு இன்று முதல்வர் பதக்கம் வழங்கல்

/

49 வன அதிகாரிகள், ஊழியர்களுக்கு இன்று முதல்வர் பதக்கம் வழங்கல்

49 வன அதிகாரிகள், ஊழியர்களுக்கு இன்று முதல்வர் பதக்கம் வழங்கல்

49 வன அதிகாரிகள், ஊழியர்களுக்கு இன்று முதல்வர் பதக்கம் வழங்கல்


ADDED : செப் 02, 2024 09:21 PM

Google News

ADDED : செப் 02, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''வனத்துறையில் சிறப்பாக செயல்பட்ட 49 வன அதிகாரிகள், ஊழியர்களுக்கு, இன்று முதல்வர் விருது வழங்கப்படும்,'' என, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, காடு வளர்ப்பு, வன மேலாண்மை, பயிற்சி, ஆராய்ச்சி, திட்டமிடல், மக்கள் பங்கேற்பு, வளர்ச்சிப் பணிகள், மனித வளம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சேவையாற்றிய வன அலுவலர்கள், ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விதான் சவுதா மாநாட்டு அரங்கில், நாளை (இன்று) வனத்துறையில் சிறப்பாக செயல்பட்ட 49 அதிகாரிகள், ஊழியர்களுக்கு 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான முதல்வர் விருது வழங்கப்படும்.

கர்நாடகாவில் 310 வன கண்காணிப்பாளர் பதவிக்கு, 1,94,007 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தகுதியான 267 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவர்களின் எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண், உடற்தகுதி மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு இன்று நடக்கும் விழாவில், நியமன கடிதத்தை முதல்வர் சித்தராமையா வழங்குகிறார். பெங்களூரு, உத்தர கன்னடா, ஷிவமொகா, சிக்கமகளூரு பகுதியை சேர்ந்த உள்ளூர் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு உள்ளது.

ஆனால், இச்சமுதாய இளைஞர்கள் விண்ணப்பிக்காததாலும், இதர தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் இப்பகுதியில் 43 பணியிடங்களுக்கான பணி நியமன கடிதம் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us