இந்தோனேஷியா விசைப்படகில் தீ விபத்து 5 பேர் பலி: 41 பேர் மாயம்
இந்தோனேஷியா விசைப்படகில் தீ விபத்து 5 பேர் பலி: 41 பேர் மாயம்
ADDED : ஆக 02, 2026 06:42 PM
ஜகார்த்தா::
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே, 271 பேருடன் சென்று கொண்டிருந்த விசைப்படகில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய, 41 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுராபயாவில் இருந்து தென் சுலாவசியில் உள்ள மாகாசார் நோக்கி, 271 பயணியர் மற்றும் பணியாளர்களுடன் விசைப்படகு சென்று கொண்டிருந்தது. மதுரா தீவு பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். படகில் இருந்து, 225 பேர் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கி 41 பேரின் கதி என்னவானது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் இந்தோனேசிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
